Back to homepage

பிரதான செய்திகள்

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள் 0

🕔12.Sep 2016

– க. கிஷாந்தன் – ஜப்பானிய யுவதிகள் சிலர், பத்தனை – கெலிவத்தை தேயிலைத் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்கின்றமையினைக் காண முடிந்தது. இவர்கள் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. தமது பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான, தேயிலை கொழுந்து கொய்தல் தொடர்பான களப் பயிற்சினைப் பெறுவதற்காக, இவர்கள் இவ்வாறு கொழுந்து பறித்தனர். இந்த பாடநெறியினை

மேலும்...
சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு

சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு 0

🕔12.Sep 2016

– யூ.எல்.எம். றியாஸ் –  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன. பள்ளிவாசல்களில் மட்டுமன்றி, மைதானங்கள் மற்றும் கடற்கரை வெளிகளிலும் தொழுகைகள் இடம்பெற்றதோடு, சொற்பொழிவுகளும் நடைபெற்றன. அந்தவகையில், சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்...
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு 0

🕔12.Sep 2016

– எப். முபாரக் – தேசிய நல்லிணக்கத்தை இந் நாட்டில் ஏற்படுத்துவதில் ‘ஊடகவியலாளர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில், திருகோணமலை மாவட்ட ஊடகவியலவாளர்களுக்கான செயலமர்வொன்று, எதிர்வரும் 01 ஆம் திகதி திருகோணமலை ஜக்அப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் என்.ஏ.ஏ. புஸ்பகுமார சகல ஊடகவியலாளா்களுக்கும் பதிவுத் தபால் மூலம் அறிவித்துள்ளார். இந்நிகழ்வில்,

மேலும்...
கல்முனையில் சிறியளவிலான நிலநடுக்கம்

கல்முனையில் சிறியளவிலான நிலநடுக்கம் 0

🕔11.Sep 2016

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேத்தில் நேற்று சனிக்கிழமை இரவு,  சிறியளவிலன நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில வீட்டுக்குள்ளிருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளதோடு, சுவர் மற்றும் சீமெந்து நிலங்களில் சிறியளவிலான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்று,  பொலிஸார் பார்வையிட்டுள்ளதோடு, பொதுமக்களும் பாதிப்புகளைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று

மேலும்...
தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு

தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு 0

🕔11.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், ஐ.தே.கட்சிளைச் சேர்ந்த அமைச்சர் தயா கமகேயை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் புதிய கட்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தயா கமகே தீவிர ஐ.தே.கட்சிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவியும் தற்போதைய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியினை வகித்து

மேலும்...
70 வயது முஸ்லிம் பெண் கொலை, அணிந்திருந்த நகைகளும் மாயம்: பெரிய நீலாவணையில் சம்பவம்

70 வயது முஸ்லிம் பெண் கொலை, அணிந்திருந்த நகைகளும் மாயம்: பெரிய நீலாவணையில் சம்பவம் 0

🕔11.Sep 2016

– ஏ.எல்.எம். ஷினாஸ் – வயோதிப பெண்ணொருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று  பெரியநீலாவணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பெரியநீலாவனையைச் சேர்ந்த 73 வயதுடைய சீனித்தம்பி பாத்தும்மா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண், நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு,

மேலும்...
வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ் 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது. வாருங்கள் கிழக்கை வடக்குடன் இணைத்து, தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம்’ என்கின்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான், பொதுபலசேனாவை வெளிச்சக்திகள் இயக்குகின்றன என்று, முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லாஹ்

மேலும்...
கொள்கலன் வெடித்ததில் 25 பேர் பலி, 50 பேர் வைத்தியசாலையில்: பங்களாதேஷில் துயரம்

கொள்கலன் வெடித்ததில் 25 பேர் பலி, 50 பேர் வைத்தியசாலையில்: பங்களாதேஷில் துயரம் 0

🕔10.Sep 2016

பங்களாதேஷின் தலைநகரமான டாக்காவுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாடி தொழிற்சாலையில் கொள்கலன் ஒன்று வெடித்ததில்  25 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. வெடிப்பின் காரணமாக, கட்டிடத்தின் நான்கு மாடிகளும் இடிந்து வீழ்ந்துள்ளன. சம்பவம் நடைபெற்றபோது தொழிற்சாலையினுள் ஊழியர்கள் இருந்துள்ளனர். ஆயினும், வெடிப்பினால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் அந்த நாட்டு

மேலும்...
எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்

எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம் 0

🕔10.Sep 2016

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள் – மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், மேற்படி தகவல் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும் மன்னிப்புக் கோருகிறேன்: பிரதமர் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும் மன்னிப்புக் கோருகிறேன்: பிரதமர் ரணில் 0

🕔10.Sep 2016

  ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும், தான் மன்னிப்புக் கோருவதாக, அந்தக் கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு ஏராளமான நல்லவற்றினைச் செய்துள்ளபோதும், கட்சி எனும் வகையில், தாம் தவறான முடிவுகள் பலவற்றினை எடுத்திருந்ததாகவும் அவர்  சுட்டிக் காட்டினார். ஐக்கிய தேசிய கட்சியின் 70வது

மேலும்...
கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

கிழக்கை வடக்குடன் இணைக்கும் திருட்டுத்தனம் நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வெளிநாட்டுச் சூழ்ச்சிகளுடன், திருட்டுத்தனமாக கிழக்கு மாகாணத்தினை வட மாகாணத்துடன் இணைக்கின்ற ஒரு பாரிய முயற்சி நடைபெற்று வருகிறது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர் கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், கிழக்கு மாகாண சபைக்குள் இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி,

மேலும்...
ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி

ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி 0

🕔10.Sep 2016

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொழும்பு – கெம்பல் பூங்காவில் இன்று கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வருடாந்த மாநாடு இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறப்பு அதிதியாக பங்கேற்றுள்ளார். ஐ.தே.கட்சியின் 70

மேலும்...
போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம்

போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம் 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றின் மீது, இனந்தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்கியதில், பஸ் நடத்துநர் காயமடைந்ததோடு, குறித்த பஸ் வண்டியும் சேதத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. திருகோணமலையிலிருந்து – மூதூர் ஊடாக பண்டாரவளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த, இலங்கை

மேலும்...
முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் பலி; மனைவியும், குழந்தையும் தப்பினர்: அதிகாலையில் சோகம்

முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் பலி; மனைவியும், குழந்தையும் தப்பினர்: அதிகாலையில் சோகம் 0

🕔10.Sep 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கரவண்டியொன்று, வீதியை விட்டு விலகி லிந்துலை – பெயார்வெல் பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய என். பிரஸ்டன் என தெரிவிக்கப்படுகிறது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன்

மேலும்...
இலங்கையில் 05 மாகாணங்கள் இருந்த காலத்திலும், கிழக்கு தனித்திருந்தது: சட்டத்தரணி பஹீஜ்

இலங்கையில் 05 மாகாணங்கள் இருந்த காலத்திலும், கிழக்கு தனித்திருந்தது: சட்டத்தரணி பஹீஜ் 0

🕔9.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்ததாக இலங்கையினுடைய வரலாற்றில் எங்குமே காண முடியாது. கிழக்கு மாகாணம் – கண்டி ராச்சியத்துடன் இணைந்தமையினைத்தான் வரலாற்றில் காண முடிகின்றது என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் சட்டத்தரணியுமான எம்.எம். பஹீஜ் தெரிவித்தார். ‘சுதந்திர கிழக்கு’ எனும் தலைப்பில், கிழக்கு மாகாணத்தை வடக்குடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்