தலைப்புச் செய்திகள்

தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு

dayamahinda-011முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், ஐ.தே.கட்சிளைச் சேர்ந்த அமைச்சர் தயா கமகேயை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவின் புதிய கட்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தயா கமகே தீவிர ஐ.தே.கட்சிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவியும் தற்போதைய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியினை வகித்து வருகின்றார்.

செல்வந்தரான தயாகமகே, ஐ.தே.கட்சியின் வளர்ச்சிக்காக பாரிய நிதிப் பங்களிப்பினைச் செய்பவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.