Back to homepage

பிரதான செய்திகள்

இளவயதுத் திருமணம்: சத்தமில்லாமல் பரவும் சமூக ‘நோய்’

இளவயதுத் திருமணம்: சத்தமில்லாமல் பரவும் சமூக ‘நோய்’ 0

🕔15.Sep 2016

– றிசாத் ஏ காதர் – திருமணம் – ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். திருமணத்தினால்தான் வாழ்க்கை பூரணப்படுகிறது. இஸ்லாத்திலும் திருமணம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருமணத்துக்கென்று சில சட்ட திட்டங்களும், விதிமுறைகளும், ஒழுக்கங்களும் உள்ளன. திருமணத்துக்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வயதெல்லை உள்ளது. உடலும், மனமும் திருமணத்துக்குத் தயாராகும் போதுதான் அது நிகழ வேண்டும். ஆனால், தற்காலத்தில்

மேலும்...
வசிம் தாஜுத்தீன் விவகாரம்: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு

வசிம் தாஜுத்தீன் விவகாரம்: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு 0

🕔15.Sep 2016

தனக்கு முன்பிணை வழங்குமாறு, கொழும்புக்கான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் சமர்ப்பித்த மனுவினை கொழும்பு மேலதிக நீதவான் துலினி அமரசிங்க இன்று வியாழக்கிழமை நிராகரித்தார். கொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வசிம் தாஜுத்தீனின் உடற்பாகங்கள் காணாமற்போன விவகாரம் தொடர்பில், தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், முன்பிணை வழங்குமாறு கொழும்புக்கான முன்னாள் சட்ட

மேலும்...
25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில்

25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில் 0

🕔15.Sep 2016

சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக இன்று காலை வருகை தந்தபோதே, அவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு

மேலும்...
அதாஉல்லா தலைமையில் கத்தமுல் குர்ஆன்; இறக்காமத்தில் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு

அதாஉல்லா தலைமையில் கத்தமுல் குர்ஆன்; இறக்காமத்தில் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு 0

🕔15.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்  அவர்களின் 16வது வருட நினைவு தினத்தையொட்டி, தேசிய காங்கிரஸ் கட்சி, கத்தமுல் குர்ஆன் நிகழ்வொன்றினை நாளை வெள்ளிக்கிழமை இறக்காமத்தில் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு, இறக்காமம் மௌலானா சென்ரர் கேட்போர் கூடத்தில் இந்

மேலும்...
திருகோணமலையில் கிழக்கின் எழுச்சி

திருகோணமலையில் கிழக்கின் எழுச்சி 0

🕔15.Sep 2016

– எப். முபாரக் – கிழக்கின் எழுச்சி – 2016 எனும் தலைப்பில் திருகோணமலையில், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் விற்பனை தொடர்பில், ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும், சந்திப்பு நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் தலைமையில்

மேலும்...
ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி 0

🕔14.Sep 2016

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான படங்களை, துமிந்த சில்வாவின் சகோதரி திலினி சில்வா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது, துமிந்த சில்வாவும் அவரின் சகாக்களும் மேற்கொண்ட துப்பாக்கிச்

மேலும்...
முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது; அவர் நிரபராதி எனவும் மன்று அறிவிப்பு

முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது; அவர் நிரபராதி எனவும் மன்று அறிவிப்பு 0

🕔14.Sep 2016

மறைந்த முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அறிவித்தது. தனது வீட்டில் பணியாற்றிய ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக அப்றூ மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சரத் ஆப்றூ அண்மையில் தனது வீட்டு மாடியில்

மேலும்...
சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல் 0

🕔14.Sep 2016

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 4.2 பில்லியன் ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த

மேலும்...
சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி

சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி 0

🕔14.Sep 2016

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோற்றுப் பொதிகளை விற்றவர் என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுதியுள்ள ‘ஜன அரகலயக்க திய சலக்குன’ என்ற நூல் வெளியிட்டு விழா கொழும்பில் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு

மேலும்...
நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன் 0

🕔14.Sep 2016

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால், தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை நவீன் வெளியிட்டார். அவர்

மேலும்...
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச 0

🕔14.Sep 2016

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல் வீரவன்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருந்தது. இதற்கமையவே அவர் வருகை தந்துள்ளார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 அரச வாகன தவறாகப் பயன்படுத்தியமை மற்றும்

மேலும்...
காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், 0

🕔13.Sep 2016

– வழங்குபவர் வட்டானையார் – ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் சொல்லி, மு.கா. செயலாளர் ஹசனலியாரின் ஃபோனுக்கு யாரோ ஒரு அன்பர் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தாராம். பெருநாளில் வாழ்த்துச் சொல்வதில் பெருசா என்ன செய்தி என்று அவசரப்பட்டுக் கேட்கப்படாது. மேட்டர் என்னன்டா, அந்த வாழ்த்து ஹசனலியாருக்கு மெல்லிசா ஒரு ஊசை ஏத்தும் வகையாக

மேலும்...
வேட்டையாடப்பட்ட கனவு

வேட்டையாடப்பட்ட கனவு 0

🕔13.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிரே, வேறொரு அரசியல் பாசறையை நோக்கி அழைத்துச் செல்வதென்பது அத்துணை சுலபமல்ல. இலங்கையில்

மேலும்...
திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔13.Sep 2016

திருத்தப்பட்ட வற் வரி சட்டமூல பத்திரத்துக்கு, அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான, திருத்தச் சட்டத்துக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று அமைச்சரவையில் மர்ப்பித்தார். ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற இந்த அமைச்சரவையில், நிதியமைச்சர் சமர்ப்பித்த திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
புதிய விமானப்படைத் தளபதியாக கபில ஜயம்பதி நியமனம்

புதிய விமானப்படைத் தளபதியாக கபில ஜயம்பதி நியமனம் 0

🕔12.Sep 2016

விமானப் படைத் தளபதியாக கபில ஜயம்பதி இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஏர் வைஸ் மாஷல் தரத்தை வகித்த இவர் ஏர் மாஷல் தரத்துக்குத் தரமுயர்த்தப்பட்ட நிலையிலேயே, இவருக்கான பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. விமானப் படைத் தளபதியாகப் பதவி வகித்த ககன் புலத்சிங்கல, இன்றைய தினம் தனது பதவியிலிருந்து ஓய்வு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்