நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

🕔 September 14, 2016

naveen-disanayaka-011ஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால், தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை நவீன் வெளியிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை மட்டுமே சேர் என நான் அழைப்பேன். வேறு யாரையும் சேர் என அழைப்பதில்லை.

நான் கடந்த அரசாங்கங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்தேன். அதன்போது மஹிந்த ராஜபக்ஷவை சேர் என அழைக்க வேண்டியிருந்தது. அதேபோன்று பசில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோரையும் சேர் என்று அழைக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.

நான் ஒருபோதும் நாமல் ராஜபக்ஷவை சேர் என்று அழைத்தது கிடையாது. பசில் ராஜபக்ஷவையினையும் சேர் என நான் அழைத்ததில்லை.

இதன் காரணமாக, எனக்கு தொடர்ச்சியாக ‘வெட்டு’ விழுந்தது. எனக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது” என்றார்.

Comments