நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

🕔 September 14, 2016

Wimal - 074முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல் வீரவன்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருந்தது.

இதற்கமையவே அவர் வருகை தந்துள்ளார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 அரச வாகன தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் அந்தக் கூட்டுத்தானத்தின் 41 மில்லியன் ரூபாய் பணத்தினை மோசடி செய்தமை தொடர்பிலே, விமலிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மேற்படி மோசடிகள் இடம்பெற்றன என்று கூறப்படுகிறது.

Comments