புதிய விமானப்படைத் தளபதியாக கபில ஜயம்பதி நியமனம்
விமானப் படைத் தளபதியாக கபில ஜயம்பதி இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.
ஏர் வைஸ் மாஷல் தரத்தை வகித்த இவர் ஏர் மாஷல் தரத்துக்குத் தரமுயர்த்தப்பட்ட நிலையிலேயே, இவருக்கான பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
விமானப் படைத் தளபதியாகப் பதவி வகித்த ககன் புலத்சிங்கல, இன்றைய தினம் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.