வசிம் தாஜுத்தீன் விவகாரம்: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு
தனக்கு முன்பிணை வழங்குமாறு, கொழும்புக்கான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் சமர்ப்பித்த மனுவினை கொழும்பு மேலதிக நீதவான் துலினி அமரசிங்க இன்று வியாழக்கிழமை நிராகரித்தார்.
கொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வசிம் தாஜுத்தீனின் உடற்பாகங்கள் காணாமற்போன விவகாரம் தொடர்பில், தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், முன்பிணை வழங்குமாறு கொழும்புக்கான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் மேற்படி மேற்படி மனுவினை சமர்ப்பித்திருந்தார்.
எவ்வாறாயினும், அவரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.