சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

🕔 September 14, 2016

chanuka-ratwatta-000143முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

4.2 பில்லியன் ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவர் இன்று கைது செய்யப்பட்டனர்

நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இவர்களைக் கைது செய்திருந்தனர்.

சானுக்க ரத்வத்த – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தயின் சகோதரர் ஆவார்.

மேற்படி சானுக்க ரத்வத்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அரச நிதியை தவறாக கையாண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சானுக்க மற்றும் லொஹான் ஆகியோரின் தந்தையாரான அனுருத்த ரத்வத்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தாயரான முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments