முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது; அவர் நிரபராதி எனவும் மன்று அறிவிப்பு

🕔 September 14, 2016

Sarath abrew - 06றைந்த முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அறிவித்தது.

தனது வீட்டில் பணியாற்றிய ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக அப்றூ மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சரத் ஆப்றூ அண்மையில் தனது வீட்டு மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

இதன்படி குறித்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்ற வேளை, பிரதிவாதி உயிரிழந்துள்ள நிலையில் வழக்கை நிறைவு செய்து கொள்ளுமாறு, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கமைய வழக்கு விசாரணைகளை முடிவுறுத்துவதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

மேலும், அரசியலமைப்பின் பிரகாரம், நீதிமன்றத்தில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாவார் என குறிப்பிட்ட நீதாவான், இதன்படி ஆப்றூவும் நிரபராதிதான் எனவும் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்