சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி

🕔 September 14, 2016

duminda-0876ரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோற்றுப் பொதிகளை விற்றவர் என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுதியுள்ள ‘ஜன அரகலயக்க திய சலக்குன’ என்ற நூல் வெளியிட்டு விழா கொழும்பில் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, பேராசிரியர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“துமிந்த சில்வாவிடம் சில வருடங்களுக்கு முன்னர் சோற்றுப் பொதியினை நான் வாங்கியிருக்கிறேன். பத்தரமுல்லையில் அவர்களின் குடும்பம் ஒரு கடையினை நடத்தி வந்தது. பின்னர், துமிந்த சில்வா எப்படியோ அரசியலுக்குள் நுழைந்தார். அதிக செல்வம் படைந்த ஒரு அரசியல்வாதியாக மாறினார். எப்படி அந்தப் பணம் அவரிடம் வந்தது? நாட்டிலுள்ள மிக மோசமான அரசியல் முறைமை பற்றி, துமிந்த சிவ்வாவின்  வழங்கு நமக்குச் சொல்கிறது.

துமிந்த சில்வா என்ற நபர் பாதுகாப்பாக இந்த சமூகத்தில் எப்படி செயற்பட்டார்? அவர்கள் எப்படி வர்த்தகத்தை செய்தனர்? அவர்களின் அதிகாரத்தை பரப்பியது எப்படி, துமிந்த சில்வா பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

லக்ஷ்மி புட் சென்டர் என்ற பெயரில் உணவு விற்பனை செய்யும் உணவகம் ஒன்று இருந்தது. அந்த உணவகத்தில் துமிந்த சில்வா பற்றுச்சீட்டை எழுதி எனக்கு சோற்றுப் பொதியை வழங்கியுள்ளார். எனக்கு அவர் உணவு விற்றுள்ளார்.

துமிந்த சில்வாவின் அன்றைய நிலைமையை எண்ணிப்பாருங்கள். இவர்களை போன்ற மிகப் பெரிய செல்வந்தர்கள் எப்படி உருவானார்கள்?

இந்த செல்வந்தரை குற்றம் சார்ந்த அரசியல் சக்தி பாதுக்காக்கின்றது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்