அதாஉல்லா தலைமையில் கத்தமுல் குர்ஆன்; இறக்காமத்தில் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு

🕔 September 15, 2016

athaullah-00145– றிசாத் ஏ காதர் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்  அவர்களின் 16வது வருட நினைவு தினத்தையொட்டி, தேசிய காங்கிரஸ் கட்சி, கத்தமுல் குர்ஆன் நிகழ்வொன்றினை நாளை வெள்ளிக்கிழமை இறக்காமத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு, இறக்காமம் மௌலானா சென்ரர் கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி  ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும், தேசிய காங்கிரஸின் கிழக்குமாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரின் ஏற்பாட்டில் நடைபெறும்  இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், எதிர்க் கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெவ்வை , தேசிய காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட பிரதிச் செயலாளர் டொக்டர் உதுமாலெவ்வை, கட்சியின் முக்கியஸ்தர்கள், மூத்த உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், கல்விமான்கள், மற்றும் உலமாக்கள்  என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்