காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

🕔 September 13, 2016

kaatthu-vaakkau-11
– வழங்குபவர் வட்டானையார் –

ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

ஜ் பெருநாள் வாழ்த்துச் சொல்லி, மு.கா. செயலாளர் ஹசனலியாரின் ஃபோனுக்கு யாரோ ஒரு அன்பர் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தாராம். பெருநாளில் வாழ்த்துச் சொல்வதில் பெருசா என்ன செய்தி என்று அவசரப்பட்டுக் கேட்கப்படாது.

மேட்டர் என்னன்டா, அந்த வாழ்த்து ஹசனலியாருக்கு மெல்லிசா ஒரு ஊசை ஏத்தும் வகையாக இருந்ததாம்.

அந்த வாழ்த்து  – கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்ததாம்.

அன்புள்ள சேர், ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள். இப்றாகிம் நபியவர்களின் வார்த்தைக்கு அன்னை ஹாஜறா கட்டுப்பட்டமை போல, அன்னை ஹாஜறாவின் சொல்லுக்கு நபி இஸ்மாயில் கட்டுப்பட்டமையைப் போல, தலைமைத்துவங்களுக்குக் கட்டுப்படுவதில்தான் தியாகம் உள்ளது.

நீங்களும் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு, தியாக வாழ்வு பெற வாழ்த்துக்கள். என்று, அந்த வாழ்த்து சொன்னதாம்.

வாழ்த்தைப் படித்த ஹசனலியார், பதில் ஒன்றை எஸ்.எம்.எஸ். செய்திருக்கிறார். அது வாழ்த்தை விடவும் பெரிய ஊசி.

நபிமார்களின் போதனைகளையும்,  நற்பண்புகளையும் நமது தலைமைகள் பின்பற்றி வாழப் பிரார்த்திப்போம் என்று பதில் அனுப்பினாராம் ஹசனலியார்.

பைசாலுக்கு வந்த சோதனை

சோதனைகள் மனுசனுக்கு பல ரூபத்தில் வரும். பிரதியமைச்சர் பைசால் காசிமுக்கு தொழில் ரூபத்தில் வந்திருக்கு போல கிடக்கு.

சுகாதார அமைச்சினால் சிற்றூழியர் நியமனம் வழங்கியிருக்காங்க. அந்த நியமனத்தில் பிரதியமைச்சர் என்கிற வகையில பைசால் காசிமுடைய பங்காக, 75 பேருக்கான நியமனம் வழங்கப்பட்டிருக்கு.

கிடைச்ச 75 இலயும், 50 நியமனத்தை – தனது சொந்த ஊரான நிந்தவூருக்குள்ளே பகிர்ந்து விட்டார் பைசால். மிச்சம் 25 ஐயும்தான், அம்பாறை மாவட்டதிலுள்ள மிச்ச ஊர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

பிரதியமைச்சரின் இந்த பங்கு போடல், மற்றைய ஊர்களுக்குப் பிடிக்கவில்லை. பங்கிடல் நேர்மையாக நடக்கவில்லை என்று பெரிய பிரச்சினை. அதனால்தான், கடந்த முதலாம் திகதி, பாலமுனை வைத்தியசாலையில் நடந்த நிகழ்வொன்றுக்கு பைசால் காசிமையும், மு.கா. தலைவர் ஹக்கீமையும் வரக்கூடாது என்று, மு.காங்கிரசின் அந்த ஊர் – மத்திய குழு ஆக்களே சிவப்புக் கொடி காட்டியிருந்தாங்க.

ஹக்கீமுக்கு தடை ஏன் என்று விசாரிச்சுப் பார்த்தம். கட்சிக்குள் இப்படி நடக்கிற அநியாயங்களை தலைவர் கண்டு கொள்ளாமல் இருக்கிறாராம். அதனால்தான் அவருக்கும் சிவப்புக் கொடியாம்.

இருந்தாலும், எல்லாத்தையும் உதறிப்போட்டு விட்டு தலைவர் ஹக்கீம், பாலமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டாரு.

ஆனா, நமக்கெதுக்கு வம்பு என்டு, பைசால் காசிம் பாலமுனைக்குப் போகல.

நவீன நெப்’போலி’யன்

மாவீரன் நெப்போலியன் பற்றி அநேகமாக எல்லோருக்கும் தெரியும். நெப்போலியனைக் கண்டால் எதிரிகளுக்கு குலை நடுக்கும். நாடுகள் மீது போர் தொடுப்பதும், வெற்றி கொள்வதும்  நெப்போலியனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

இப்படிப்பட்ட அந்தாளுக்கு ஒரு பெரிய பிரச்சினை. பூனைகளைக் கண்டால் பயந்து நடுங்கி – வியர்த்து விருவிருத்துப் போய்விடுவாராம் மனிதர். அது ஒரு நோய்.

இதை எதுக்குச் சொல்றேனென்டா…

அந்த முஸ்லிம் கட்சித் தலைவருக்கு  – ஊடகங்கள் தொடர்பிலும், ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் இருந்து வந்த பீதி, கொஞ்சநாளாக ரொம்பவும் அதிகமாகிட்டாம்.

அதுவும், பத்தி எழுத்தாளரான ஒரு ஊடகவியலாளரைப்பற்றி அடிக்கடி, தனது ஆட்களிடம் பேசுகிறாராம். குறித்த ஊடகவியலாளர் தன்னை அச்சுறுத்துவதற்காகவே, தன்னுடைய பலவீனங்களையெல்லாம் விமர்சித்து எழுதுவதாக பலரிடமும் கொட்டித் தீர்த்து வருகிறாராம்.

விசயம் என்னன்டா, அந்த ஊடகவியலாளரின் எழுத்து – முஸ்லிம் கட்சித் தலைவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை அவரே உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்தத் தலைவருக்கு நவீன நெப்’போலி’யன் என்டு பெயரு வைக்கலாம். சூப்பரா இருக்கும்.

பாவிகள்

முஸ்லிம் கட்சியொன்றின் மூன்று பெரிசுகளுக்கிடையில் வெட்டுக்குத்து நடந்து வருகுதல்லவா. அந்த மூன்று பேர் பற்றியும் கூட்டாளியொருவர், நறுக்கென்டு ஒரு விசயம் சொன்னார்.

மூன்று பேருமே பாவிகள்தானாம்.

அதில் ஒன்டு – அப்பப்ப பாவியாம்
ரெண்டாவது – பாவியாம்
மூணாவது – கொடும்பாவியாம்.

யாரு – எது எண்டு, நீங்களே கண்டுபுடிச்சிக்கோங்க மக்காள்.

சொரி லீடர்

ந்தவூரில் (நிந்தவூரில் என்டு வாசிச்சிடாதீங்க) இருக்கும் அதிகார அரசியல்வாதி, லீடரை சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்திருந்தார். அப்போது, வேற கட்சியிலிருந்து தங்கட கட்சிக்கு வந்த,  அந்தவூர் சட்டத்தரணித் தம்பியை அரவணைத்துக் கொண்டு அரசியல் செய்யுமாறு, அதிகார அரசியல்வாதிக்கு லீடர் சொல்லியிருக்கிறார்.

ஆனால், லீடர் அப்புடிச் சொன்னது அந்த அரசியல்வாதிக்குப் புடிக்கல. கூடவே, கடுப்பாகவும் ஆகிட்டாரு. “சொரி லீடர். நம்மட கட்சிக்கு – வார தேர்தல்ல நான் வேலை செய்வன், கட்சிக்கு பாடுபடுவன். அதில நோ டவுட். ஆனா, அவனை தோக்கடிக்காம விடமாட்டன்” என்டாராம்.

அதுக்கு லீடர் என்ன சொன்னார்ரா மன என்டு, தகவல் சொன்ன தம்பியிடம் கேட்டன்.

வழமைபோல், வாயைச் சப்பினார் என்டான்.

சொல்லி வேல இல்லாத பிஸ்னஸ்

பிரதிக்குக் கிடைச்ச தொழில்வாய்ப்புகளில் கொஞ்சத்த, அல்லசல் ஊர்களுக்கும் பன்னீர் தெளிச்ச மாதிரிச் தெளிச்சாரு.

ஆனா, அந்தப் பன்னீரை – உள்ளுர் ராசாக்கள் சுளைகளுக்குக் கைமாற்றி விட்டார்களாம்.

ஒரு அப்பாவிக்கிட்ட உள்ளுர் ராசா ஒருவர், மூணு சுளை வாங்கிக் கொண்டு, பன்னீரை வித்திருக்காரு என்டா பாருங்களன்.

இதப்பற்றி, பிரதிக்குத் தெரியுமா இல்லையா என்டு நமக்குத் தெரியாது.

கட்சிக்குக் கஷ்டப்பட்ட புள்ளயளுக்கு, குப்ப அள்ளுற தொழிலைக் கொடுக்கும் போதும், இப்படி கருணை இல்லாம நடந்துக்கிறது சரியில்லை.

அல்லாஹ் சுடுவான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்