பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

🕔 September 12, 2016

japan-girl-01
– க. கிஷாந்தன் –

ப்பானிய யுவதிகள் சிலர், பத்தனை – கெலிவத்தை தேயிலைத் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்கின்றமையினைக் காண முடிந்தது.

இவர்கள் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.

தமது பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான, தேயிலை கொழுந்து கொய்தல் தொடர்பான களப் பயிற்சினைப் பெறுவதற்காக, இவர்கள் இவ்வாறு கொழுந்து பறித்தனர்.

இந்த பாடநெறியினை மேற்கொள்வதற்காக, 05 மாணவிகள் இவ்வாறு இலங்கை வந்துள்ளனர்.

இலங்கைக்கான சர்வோதய அமைப்பின் ஊடாக, இவர்கள் இப்பாட நெறிகளை ஆராய்ச்சியின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி ஜப்பானிய பல்கலைகழக யுவதிகள், இவ்வாறு கொழுந்து கொய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டமையானது, பலரின் கவனத்தையும் ஈர்த்தது.japan-girl-02 japan-girl-03 japan-girl-04 japan-girl-05

Comments

புதிது பேஸ்புக் பக்கம்