நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு

🕔 September 12, 2016

workshop-0113– எப். முபாரக் –

தேசிய நல்லிணக்கத்தை இந் நாட்டில் ஏற்படுத்துவதில் ‘ஊடகவியலாளர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில், திருகோணமலை மாவட்ட ஊடகவியலவாளர்களுக்கான செயலமர்வொன்று, எதிர்வரும் 01 ஆம் திகதி திருகோணமலை ஜக்அப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் என்.ஏ.ஏ. புஸ்பகுமார சகல ஊடகவியலாளா்களுக்கும் பதிவுத் தபால் மூலம் அறிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இச் செயலமர்வில் பங்குபற்றுகின்றமை தொடர்பாக, எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் 077-8926338 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துல் விடுக்கப்பட்டுள்ளது..

Comments