முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் பலி; மனைவியும், குழந்தையும் தப்பினர்: அதிகாலையில் சோகம்
🕔 September 10, 2016


– க. கிஷாந்தன் –
முச்சக்கரவண்டியொன்று, வீதியை விட்டு விலகி லிந்துலை – பெயார்வெல் பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய என். பிரஸ்டன் என தெரிவிக்கப்படுகிறது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியிலிருந்து லிந்துலை நாகசேனை வலஹா கொலனி பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பாதையை விட்டு விலகிய முச்சக்கர வண்டி, 21 அடி பள்ளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடத்தில் மீது விழுந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் மனைவியும், பிள்ளையும் கூடவே பயணித்திருந்தனர். ஆயினும் அவர்கள் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

