ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி

🕔 September 10, 2016

unp-aniv-011க்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி கொழும்பு – கெம்பல் பூங்காவில் இன்று கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வருடாந்த மாநாடு இடம்பெறுகிறது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறப்பு அதிதியாக பங்கேற்றுள்ளார்.

ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருடம் 06 ஆம் திகதி நிறைவடைகின்றபோதும், அதற்கான நிகழ்வுகள் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1945 ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் 06 ஆம் திகதி, பாம் கோட் – அல்பட் கிரஸன் எனும் இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தோற்றம் பெற்றது. இதில் 205 ஸ்தாபக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஐ.தே.கட்சியின் முதலாவது தலைவராக டி.எஸ். சேனநாயக்க பதவியேற்றார். உப தலைவர்களாக, எஸ்.டப்ளியு. ஆர்.டி. பண்டாரநாயக்க, டி.பி. ஜாயா, அருணாச்சலம் மகாதேவா, எஸ். நடேசன். ஜே.எல். கொத்தலாவல மற்றும் ஜோஜ் ஆர்.டி. சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பொருளாளர்களாக, ஏ.ஆர்.ஏ. ராசிக் மற்றும்  ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

கட்சியின் செயலாளராக எச்.டப்ளியு. அமரசூரிய தெரிவானார்.

1947 ஆம் ஆண்டு நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஐ.தே.கட்சி, 1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றது.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி பாரிய வெற்றியைப் பெற்றுக் கொண்டது. அப்போதைய நாடாளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 140 ஆசனங்களை அந்தக் கட்சி கைப்பற்றிக் கொண்டது.unp-aniv-022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்