எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள் – மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், மேற்படி தகவல் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 443 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டின் – முதல் 08 மாத காலப் பகுதியில் 391 கொலைகளும், 2013 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 402 கொலைச் சம்பவங்களும் பதிவாகியிருந்ததாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.