போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம்

🕔 September 10, 2016

bus-attact-0222
– றிசாத் ஏ காதர் –

வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றின் மீது, இனந்தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்கியதில், பஸ் நடத்துநர் காயமடைந்ததோடு, குறித்த பஸ் வண்டியும் சேதத்துக்குள்ளானது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது.

திருகோணமலையிலிருந்து – மூதூர் ஊடாக பண்டாரவளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானது.

மேற்படி பஸ் வண்டி, வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமானது எனத் தெரியவருகிறது.

பஸ் மீதான தாக்குதலுக்கு காரணம் என்னவென்று அறிய முடியவில்லை.

இது தொடர்பில் அவசர பொலிஸ் இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.bus-attact-0333bus-attact-0111

Comments

புதிது பேஸ்புக் பக்கம்