70 வயது முஸ்லிம் பெண் கொலை, அணிந்திருந்த நகைகளும் மாயம்: பெரிய நீலாவணையில் சம்பவம்

🕔 September 11, 2016

murder-periyaneelavanai-01
– ஏ.எல்.எம். ஷினாஸ் –

யோதிப பெண்ணொருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று  பெரியநீலாவணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பெரியநீலாவனையைச் சேர்ந்த 73 வயதுடைய சீனித்தம்பி பாத்தும்மா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பெண், நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, காணாமல் போனவரைத் தேடவும் ஆரம்பித்தனர்.

இந்நிலையில்,  பெரியநீலாவணை விஷ்னு கோவில் வீதியின் நான்காவது ஒழுங்கையில் – குறித்த பெண், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இவர் அணிந்திருந்த தங்க மாலை, காதணி மற்றும் மோதிரம் என்பன காணாமல் போயுள்ளன.

சம்பவ இடத்துக்கு விரைந்த கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.கே. பேரின்பராஜா- பிரேதத்தைப் பார்வையிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, கல்முனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுத்தீன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.murder-periyaneelavanai-02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்