Back to homepage

பிரதான செய்திகள்

சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு

சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு 0

🕔19.Apr 2017

சீனாவில் தங்கியிருந்து ஒரு வருட கற்கை நெறியொன்றினை நிறைவு செய்யும் தனது திட்டத்தினை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைவிடத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. புலமைப் பரிசில் ஒன்றின் மூலம் இந்தக் கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது. ஆயினும், ஒரு வருட காலம் நாட்டை விட்டும் தூரமாகியிருப்பதற்கு முன்னாள்

மேலும்...
பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது:  சுகாதார அமைச்சர்

பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது: சுகாதார அமைச்சர் 0

🕔19.Apr 2017

பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரட் விற்பனையினை, இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்துள்ளார். ஏற்கனவே, உதிரிகளாக சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினை அடுத்து,

மேலும்...
கரதியானவில் ஆர்ப்பாட்டம்; கொழும்பு குப்பைகள் திருப்பப்பட்டன

கரதியானவில் ஆர்ப்பாட்டம்; கொழும்பு குப்பைகள் திருப்பப்பட்டன 0

🕔19.Apr 2017

பிலியந்தல, கரதியான கழிவுக் கூடங்களில் கொட்டுவதற்காக, கொழும்பிலிருந்து குப்பைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் திருப்பியனுப்பியுள்ளனர். கரதியான கழிவுக் கூட நுழைவாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரே, குறித்த வாகனங்களை இவ்வாறு திருப்பதியனுப்பியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான நிலைவரம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. கொழும்பு குப்பைகளை கரதியானவுக்கு கொண்டுவரவேண்டாம் எனத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும்...
ஆணொருவர் இலங்கையில் கர்ப்பம்; அதிர வைத்தது பரிசோதனை அறிக்கை

ஆணொருவர் இலங்கையில் கர்ப்பம்; அதிர வைத்தது பரிசோதனை அறிக்கை 0

🕔19.Apr 2017

சூரியயவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளதாக வைத்தியசாலை பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன. இதனால், குறித்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். சூரியவெவ வைத்தியசாலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவருக்கு வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வைத்தியரின் பரிந்துரைக்கமைய குறித்த நபரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் வைத்தியர்

மேலும்...
கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன

கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன 0

🕔19.Apr 2017

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தல – கரதியான கழிவுக் கூடங்களில் தற்காலிகமாக கொட்டுவதற்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை காலை இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குறித்த பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் வீ. கே.ஏ. அனுர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும்...
திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம்

திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம் 0

🕔19.Apr 2017

– க. கிஷாந்தன் – இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது படு காயமடைந்த நால்வர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 28

மேலும்...
அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம்

அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம் 0

🕔18.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் –அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை, பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றுவதென, அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில், இன்று செவ்வாய்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் ரி.

மேலும்...
வசீம் தாஜுதீனின் கடனட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டதா; விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிப்பு

வசீம் தாஜுதீனின் கடனட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டதா; விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிப்பு 0

🕔18.Apr 2017

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயகவை இந்த மாதம் 27ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. குறித்த கொலை வழக்கின் சாட்சிகளை மறைக்க முற்பட்டார் எனும்

மேலும்...
மீராவோடை தையல் கடையில் தீ விபத்து; பெருமளவு துணிகள் நாசம்

மீராவோடை தையல் கடையில் தீ விபத்து; பெருமளவு துணிகள் நாசம் 0

🕔17.Apr 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –மீராவோடை மேற்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தையல் கடையொன்றில் இன்று திங்கட்கிழமை தீ பரவியதில் அங்கிருந்த தையல் சாதனங்கள் மற்றும் துணிகள் போன்றவை நாசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத் தீ விபத்தினால் சுமார் 250,000 ரூபாய் பெறுமதியான துணி வகைகள் பொருட்கள் முற்றாக நாசமடைந்ததாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஹயாத்து முகம்மது முஹம்மது

மேலும்...
இலங்கையின் கடன் தொகை; பிரஜையொருவருக்கு 04 லட்சம் ரூபாய்: அமைச்சர் சஜித் தெரிவிப்பு

இலங்கையின் கடன் தொகை; பிரஜையொருவருக்கு 04 லட்சம் ரூபாய்: அமைச்சர் சஜித் தெரிவிப்பு 0

🕔17.Apr 2017

இலங்கை பிரஜை ஒவ்வொருவரும் சுமார் 04 லட்சம் ரூபாய் கடன் சுமையுடன் உள்ளனர் என்று, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், பெருமளவான கடனை நாடு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இவ்வாறு பெறப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டி

மேலும்...
தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது

தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது 0

🕔17.Apr 2017

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையையைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜமீர் அப்துல் வாஹிட் (வயது 42), அல்தாப் சாஹுல் ஹமீத் (வயது 48) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மல வாய் பகுதியினுள் தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு செல்ல முயற்சித்த

மேலும்...
நாடாளுமன்ற எதிரணி ஆசனத்தில், ஐ.தே.க. உறுப்பினர்கள் அமரத் தீர்மானம்

நாடாளுமன்ற எதிரணி ஆசனத்தில், ஐ.தே.க. உறுப்பினர்கள் அமரத் தீர்மானம் 0

🕔17.Apr 2017

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் ஒரு தொகையினர் எதிரணியில் அமரத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எதிரணியில் அமரவுள்ள குழுவுக்கு தலைவர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ராஜாங்க அமைச்சர் ஒருவரின் பெயரும், இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், ரஞ்சித் அலுவிஹாரே,

மேலும்...
குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔17.Apr 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி அருகாமையில் இருந்த குடியிருப்புக்கள் மீது சரிந்து விழுந்ததில் இந்த மரணங்கள் ஏற்படுள்ளன. இதேவேளை, இன்னும் 30 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டு தினமன்று இந்த அனர்த்தம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும்...
இலங்கைக்கு தெற்கே 5.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு

இலங்கைக்கு தெற்கே 5.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு 0

🕔16.Apr 2017

இலங்கைக்கு தெற்காக பகுதியில் அமைந்துள்ள இந்து சமுத்திரத்தில் நிலம் அதிர்வு ஏற்பட்டது. மாத்தறையிலிருந்து 1498.5 கிலோமீற்றர் தொலைவிலும், தங்காலையிலிருந்து 1504.1 கிலோமீற்றர் தொலைவிலும், வெலிகமவிலிருந்து 1512 கிலோமீற்றர் தொலைவிலும் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அதிர்வு 5.7 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நில

மேலும்...
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில், 10 பேர் பலி

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில், 10 பேர் பலி 0

🕔15.Apr 2017

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குப்பைமேடு சரிந்ததில்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  17 பேரில் 10 பேர் மரணமடைந்துள்ளனர் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. மரணமடைந்தவர்களில் மாணவர்களும்அடங்குகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், 100 வீடுகள் குப்பைக்குள் சிக்கிக்கொண்டன. எனினும், அங்குள்ள பலவீடுகளைச் சேர்தோர். இவ்வனர்த்தத்தின் போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்