கரதியானவில் ஆர்ப்பாட்டம்; கொழும்பு குப்பைகள் திருப்பப்பட்டன

🕔 April 19, 2017

பிலியந்தல, கரதியான கழிவுக் கூடங்களில் கொட்டுவதற்காக, கொழும்பிலிருந்து குப்பைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் திருப்பியனுப்பியுள்ளனர்.

கரதியான கழிவுக் கூட நுழைவாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரே, குறித்த வாகனங்களை இவ்வாறு திருப்பதியனுப்பியுள்ளனர்.

இதனால், அங்கு பதற்றமான நிலைவரம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

கொழும்பு குப்பைகளை கரதியானவுக்கு கொண்டுவரவேண்டாம் எனத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், கொழும்பிலிருந்து கரதியானவுக்கு குப்பைகளை எடுத்துச் சென்ற 08 வாகனங்களை திருப்பியனுப்பியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 400 பேர் ஈடுபட்டுள்ளனர் என எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்பா செய்தி: கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன

Comments