இலங்கையின் கடன் தொகை; பிரஜையொருவருக்கு 04 லட்சம் ரூபாய்: அமைச்சர் சஜித் தெரிவிப்பு

🕔 April 17, 2017

லங்கை பிரஜை ஒவ்வொருவரும் சுமார் 04 லட்சம் ரூபாய் கடன் சுமையுடன் உள்ளனர் என்று, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், பெருமளவான கடனை நாடு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இவ்வாறு பெறப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்படுறது.

இந்த நிலையிலேயே, தற்போது தனி நபர் ஒருவரின் கடன் சுமை எவ்வளவு என்பதை, அமைச்சர் சஜித் பிரேமதாஸ வெளிப்படுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்