கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தல – கரதியான கழிவுக் கூடங்களில் தற்காலிகமாக கொட்டுவதற்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை காலை இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குறித்த பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் வீ. கே.ஏ. அனுர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பை சூழவுள்ள மேலும் சில பகுதிகளிலும் கழிவுகளை கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அவ்வாறு குப்பைகளைக் கொட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட பகுதிகள் எவைஎ என்பது குறித்து, ஊடகங்களுக்கு வௌிப்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.