தங்கம் கடத்திய புத்தளம் முஸ்லிம்கள் இருவர், மும்பையில் கைது

🕔 April 17, 2017

ங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையையைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜமீர் அப்துல் வாஹிட் (வயது 42), அல்தாப் சாஹுல் ஹமீத் (வயது 48) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல வாய் பகுதியினுள் தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு செல்ல முயற்சித்த இவர்களை, மும்பை சுங்கப் பகுதியினரின் வான் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

துபாயிலிருந்து எமிரேட் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்தை வந்தடைந்த போது, இவர்கள் இருவரும் தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜமீர் அப்துல் வாஹிட் என்பவரிடமிருந்து 1516 கிராம் எடையுடைய 13 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி  45.48 லட்சம் இந்திய ரூபாயாகும்.

அதேவேளை,  அல்தாப் சாஹுல் ஹமீத் என்பவரிடமிருந்து 1399 கிராம் எடையுடைய 12 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதன் பெறுமதி 41.97 இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புடவை, உடுப்பு மற்றும் அழகு சாதனைப் பொருட்கள் வியாபாரிகள் எனும் பெயரில், மேற்படி இருவரும் அடிக்கடி இந்தியாவுக்குப் பயணிப்பவர்கள் என, மும்பை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்