இலங்கைக்கு தெற்கே 5.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு

🕔 April 16, 2017

லங்கைக்கு தெற்காக பகுதியில் அமைந்துள்ள இந்து சமுத்திரத்தில் நிலம் அதிர்வு ஏற்பட்டது.

மாத்தறையிலிருந்து 1498.5 கிலோமீற்றர் தொலைவிலும், தங்காலையிலிருந்து 1504.1 கிலோமீற்றர் தொலைவிலும், வெலிகமவிலிருந்து 1512 கிலோமீற்றர் தொலைவிலும் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அதிர்வு 5.7 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நில அதிர்வு கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நில அதிர்வினால் இதுவரை எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்