Back to homepage

பிரதான செய்திகள்

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு 0

🕔15.Aug 2017

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாஜுதீனின் கொலை சந்தேக நபர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் மெய் பாதுகாவலர் வசமிருந்த டிபென்டர் வாகனத்தை உபயோகித்ததாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேற்படி

மேலும்...
ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம்

ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம் 0

🕔15.Aug 2017

வெளி விவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ள திலக் மாரப்பன, அந்தப் பதவியை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளி விவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்துள்ள போதும், அவர் நியமித்த தனிப்பட்ட அலுவலர்கள், தற்போதும் அந்த அமைச்சில் இருப்பதனாலேயே, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு திலக் மாரப்பன தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அமைச்சின் வாகனங்களையும், ஏனைய

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு 0

🕔15.Aug 2017

– எம்.வை. அமீர் –சாய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.சாய்ந்தமருது பிரதேசத்தை தனி  உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல், அமைச்சர் பைசர்

மேலும்...
நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம்

நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம் 0

🕔14.Aug 2017

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி ராஜினாமா என்பது, களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே, மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார். மேலும் இதுவிடயமாக அவர் குறிப்பிடுகையில்; “ஊழல் விவகாரங்களில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அமைச்சர்

மேலும்...
மக்கள் காங்கிரசின் செயலாளருக்கு எதிரான தடையுத்தரவு கோரிக்கையினை, நீதிமன்றம் நிராகரிப்பு

மக்கள் காங்கிரசின் செயலாளருக்கு எதிரான தடையுத்தரவு கோரிக்கையினை, நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔14.Aug 2017

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் செயற்படுவதற்கு தடையுத்தரவு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக, மக்கள் காங்கிரஸின் அரசியல் யாப்பு, மற்றும் சட்ட விவகார பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் தாக்கல் செய்த வழக்கில், செயலாளர்

மேலும்...
பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம்

பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம் 0

🕔14.Aug 2017

– க. கிஷாந்தன் – மாஹாஊவாபத்தன, வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில்   தனியாளர் மினி பஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலா

மேலும்...
துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு

துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு 0

🕔14.Aug 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் போவதாக, பொலிஸ் மா அதிபர் மிரட்டியதாக, மேற்படி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பூஜித ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் காலையில் 8.30

மேலும்...
மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி

மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி 0

🕔13.Aug 2017

முக்தார் அஹமட் – மத்திய முகாம் பள்ளிவாசலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்), அப்பிரதேச மையவாடிகளுக்கான விளக்குகள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார். கடந்த மாதம் மத்திய முகாமுக்கு விஜயம் செய்தபோது, மத்தியமுகாம் முதலாம் வட்டாரம்

மேலும்...
அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார்

அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார் 0

🕔13.Aug 2017

– க. கிஷாந்தன் – அம்பகமுவ – கல்பொதியாய பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்த ஆடைத்தொழிற்சாலைக்கென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 12 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 25 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழா நிகழ்வில், நுவரெலியா மாவட்ட

மேலும்...
தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம்

தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம் 0

🕔13.Aug 2017

மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றினூடாகவே, இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு அரசியலமைப்பை மீறும் செயல் என்று, அந்தக் கடிதத்தில் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில்

மேலும்...
நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர்

நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் 0

🕔13.Aug 2017

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடி படையினருக்கும், வேனில் பயணித்த பாதாள உலகக் கோஸ்டி என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதன்போது, காயமடைந்த இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும்...
மீடியாகாரனுகளுக்கு தெரிஞ்சா போச்சு; களேபரத்துக்கிடையில், மு.கா.தலைவரின் கவலை

மீடியாகாரனுகளுக்கு தெரிஞ்சா போச்சு; களேபரத்துக்கிடையில், மு.கா.தலைவரின் கவலை 0

🕔13.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நேற்று வாக்குவாதம் மற்றும் அடிபிடி நடைபெற்ற போதும், பிரச்சினைக்கான காரணத்தையறிந்து அதனைத் தீர்த்து வைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் மேற்கொள்ளவில்லை என்று, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கணிசமானோர் விசனம் தெரிவிக்கின்றனர். மேற்படி கூட்டம் நேற்று சனிக்கிழமை கட்சித் தலைவர் ரஊப்

மேலும்...
இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்: சேத விபரங்கள் அறியப்படவில்லை

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்: சேத விபரங்கள் அறியப்படவில்லை 0

🕔13.Aug 2017

இந்தோனேஷியா சுமாத்ரா தீவில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6.5 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் பெங்குலு பிரதேசத்திலிருந்து 73 கிலோமீற்றர் தூரத்தில், கடலுக்கடியில் சுமார் 35 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூமியதிர்ச்சியினால் சுனாமி அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆயினும்,

மேலும்...
அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம்

அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம் 0

🕔13.Aug 2017

– முஸாதீக் முஜீப் –நீர்கொழும்பு – குரணை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாள உலக கோஸ்டியினருக்கும் இடையில் இந்த துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்றது. பாதாள உலக கோஸ்டியைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக

மேலும்...
மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல்

மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல் 0

🕔12.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று சனிக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அடிதடி இடம்பெற்றமையினால், அங்கு  கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால், மு.கா. தலைவர் ஹக்கீம் பாரிய அவமானத்துக்குள்ளானார். முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஒலுவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்