மத்திய முகாம் பள்ளி வாசல், மையவாடிகளுக்கு; கலாநிதி ஜெமீல் உதவி
முக்தார் அஹமட் –
மத்திய முகாம் பள்ளிவாசலுக்கு மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்), அப்பிரதேச மையவாடிகளுக்கான விளக்குகள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார்.
கடந்த மாதம் மத்திய முகாமுக்கு விஜயம் செய்தபோது, மத்தியமுகாம் முதலாம் வட்டாரம் நூரானியா ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினர், கலாநிதி ஜெமீலிடம் தமது தேவைகள் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர்.
அதற்கு அமைவாக பள்ளிவாசலுக்கான ஜெனரேட்டர் மற்றும் மையவாடிகளுக்கான மின்விளக்கு மற்றும் அவற்றுக்கான உபகரணங்களை, பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கலாநிதி ஜெமீல் கையளித்தார்.