நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர்

🕔 August 13, 2017

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடி படையினருக்கும், வேனில் பயணித்த பாதாள உலகக் கோஸ்டி என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதன்போது, காயமடைந்த இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இருவர் கைதாகினர். இவர்களில் ஒருவர், கடற்படையிலிருந்து விலகியவர் எனக் கூறப்படுகிறது.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கு, வேன் ஒன்றை நிறுத்துவதற்காக, அதிரடிப்படையினர் டிபென்டர் வாகனத்தில் துரத்திச் சென்ற வேளை, வேனில் இருந்தவர்கள் அதிரடிப் படையினரைநோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, பதிலுக்கு அதிரடிப் படையினரும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர்.

தொடர்பான செய்தி: அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்