துஷ்பிரயோகம் செய்யப் போவதாக மிரட்டினார்; பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முறைப்பாடு

🕔 August 14, 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் போவதாக, பொலிஸ் மா அதிபர் மிரட்டியதாக, மேற்படி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பூஜித ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் காலையில் 8.30 தொடக்கம் 8.45 வரை பௌத்த தியானங்களில் ஈடுபட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர் இதன் காரணமாக பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோருக்கும் இச்சட்டம் காரணமாக பெரும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் கிறித்தவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் பொலிஸ் தலைமையக லிப்ட் பணியாளர் ஆகியோர் தியான வழிபாடுகளில் கலந்து கொள்ளவில்லை என்று பொலிஸ்மா அதிபரினால் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள நேர்ந்துள்ள போதிலும் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முறைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை.

இதற்கிடையே பொலிஸ் தலைமையகத்தில் வரவேற்பாளராக கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர், தியான வழிபாடுகளில் கலந்துகொள்வதில்லை என்று ஆத்திரமடைந்துள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குறித்த பெண் உத்தியோகத்தரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் போவதாக மிரட்டியுள்ளார்.

பொலிஸ் திணைக்கள ஊழியர்களை பொலிஸ்மா அதிபர் நேரடியாக தாக்கும் காட்சிகள் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் காட்சிகள் அடங்கிய சி.சி.ரி.வி. காணொளிகள் தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்