மக்கள் காங்கிரசின் செயலாளருக்கு எதிரான தடையுத்தரவு கோரிக்கையினை, நீதிமன்றம் நிராகரிப்பு

🕔 August 14, 2017

 

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் செயற்படுவதற்கு தடையுத்தரவு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக, மக்கள் காங்கிரஸின் அரசியல் யாப்பு, மற்றும் சட்ட விவகார பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் தாக்கல் செய்த வழக்கில், செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் செயற்படுவதற்கு தடையுத்தரவு கோரப்பட்டிருந்த நிலையில், அந்தக் கோரிக்கையினை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு அமைய, செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தொடர்ந்தும் தமது கடமைகளை செய்ய எந்த இடையூறும் இனி இருக்காது என, ருஷ்தி ஹபீப் மேலும் கூறினார்.

இதேவேளை, தேர்தல் திணைக்களத்திற்கும் நீதிமன்றின் இந்த நிலைப்பாட்டினை அறிவித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகமாக சுபைர்தீன் தனது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பார் என்றும் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

(கட்சியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்