அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார்
– க. கிஷாந்தன் –
அம்பகமுவ – கல்பொதியாய பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த ஆடைத்தொழிற்சாலைக்கென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 12 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 25 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழா நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, அமைச்சின் முக்கியஸதர்கள் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக கினிகத்தேனை பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் வகையில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாஸவின் அழைப்பின் பேரில் வருகை தந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில், தெரிவு செய்யப்பட்ட மக்களிடம் விசேட கலந்துரையாடல் நிகழ்வு கினிகத்தேனை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது.