தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம்

🕔 August 13, 2017

மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றினூடாகவே, இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு அரசியலமைப்பை மீறும் செயல் என்று, அந்தக் கடிதத்தில் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் முடிவொன்றினை எடுத்துள்ளது. இதற்காக, அரசியலமைப்பில் மாற்றமொன்றினை செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் ஆயுட்காலம் இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் நிறைவடைகின்ற போதிலும், அரசாங்கத்தின் முடிவுக்கிணங்க, அந்த சபைகளுக்கான தேர்தர்கள் பிற்போடப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்