Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

ஹொரவபொத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

ஹொரவபொத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கெபிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒருவரை தாக்கி, அவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றில்

மேலும்...
கார் விபத்தில் தந்தை, மகன் பலி; தாய் வைத்தியசாலையில்

கார் விபத்தில் தந்தை, மகன் பலி; தாய் வைத்தியசாலையில்

– க. கிஷாந்தன் – எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயார் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தையுடைய எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையும், 04 வயதுடைய

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: அர்ஜுன ரணதுங்க

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: அர்ஜுன ரணதுங்க

“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தால், அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருந்திருக்க மாட்டேன்” என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். குருணாகல் வெலிகதர மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். “தோற்கடிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒன்றிணைந்த எதிரணியினருக்குத் தேவையாக

மேலும்...
குளியாப்பிட்டிய பிரதேச சபையில், மயிலுக்கு பிரதி தவிசாளர் பதவி

குளியாப்பிட்டிய பிரதேச சபையில், மயிலுக்கு பிரதி தவிசாளர் பதவி

குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் (தமாரை மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் (மயில் சின்னம்) இணைந்து கைப்பற்றிக்கொண்டது. மேற்படி பிரதேச சபையின் முதல் அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள்

மேலும்...
அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது

அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘மஹசொன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று சனிக்கிழமை சென்று சந்தித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க, தற்போது நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது

நபரொருவர் 600 ட்ரமடோல் மாத்திரைகளுடன் நேற்று செவ்வாய்கிழமை இரவு, கல்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், கல்பிட்டி பிரதேச சபைக்கான கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கல்பிட்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய மேற்படி நபர், நீண்ட காலமாக போதைப் பொருள் கடத்தலில்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை, மே 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை, மே 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரின் சகோதரர் ஆராய்ச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோரை மே மாதம் 25ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலாளரை நாடாளுமன்ற உறுப்பினரும் அவரின் சகோதரரும் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட

மேலும்...
சிங்களவர் தாக்கப்பட்டதால் மாதம்பையில் பதட்டம்; பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பில்

சிங்களவர் தாக்கப்பட்டதால் மாதம்பையில் பதட்டம்; பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பில்

 சிலாபம் – மாதம்பை பகுதியில் சிங்களவர் ஒருவரை, முஸ்லிம் ஒருவர் தாக்கியமை காரணமாக, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள வயோதிப நபர் ஒருவர் மீது முஸ்லிம் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவுவு இடம்பெற்துள்ளது. மாதம்பையிலிலுள்ள 27 வயதுடைய முஸ்லிம் நபர்

மேலும்...
ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது

ஆனமடுவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன், தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை பெற்றோல் குண்டு வீசியதில், குறித்த ஹோட்டல் தீப்பற்றி எரிந்தது. குறித்த ஹோட்டலுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி 07 சந்தேக

மேலும்...
இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம்

இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம்

முஸ்லிம்கள் மீது, சிங்கள காடையர்களின் இன ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபுறமாக சிங்கள சமூகத்திலுள் இன்னுமொரு சாரார் தமது மனித நேயத்தினையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தியுள்ள சம்பவமொன்று புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் நடந்துள்ளது. முஸ்லிம் நபரொருவர் ஆனமடுவ பிரசேதத்தில் நடத்தி வந்த ஹோட்டலொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சிங்கள இனவாதிகளால் தீ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்