குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவருக்கு 03 வருட கடூழிய சிறைத் தண்டனை

🕔 December 14, 2023

குருநாகல் மாநகர சபையின் பொதுஜன பெரமுன முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பேருக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருநாகல் நகரில் அமைந்துள்ள 13ஆம் நூற்றண்டு காலத்துக்குரிய புவனேகபாகு மன்னரின் ராஜசபை கட்டடத்தை இடித்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று(14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்தமைக்காக குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட சிலருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

16 ஜூலை 2022 அன்று, வீதி அபிவிருத்தித் திட்டத்திற்காக மேற்படி கட்டடம் இடிக்கப்பட்டது.குறித்த கட்டடத்தை இடித்த வழக்கில் குருநாகல் மேயர், மாநகர ஆணையாளர், பொறியியலாளர் மற்றும் இருவருக்கு எதிராக 2020 ஓகஸ்ட் 06 ஆம் திகதி குருநாகல் நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்