பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார்
மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் இயங்கிவரும் பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட பலரை – வரக்காபொல பொலிஸார் கைது செய்தனர்.
வரக்காபொல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக – நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்டு வரும் ‘யுக்திய’ எனும் சிறப்பு நடவடிக்கை காரணமாக, சந்தேக நபர்கள் வரக்காபொல பிரதேசத்தில் தங்கும் முடிவை எடுத்திருந்தனர்.
நுவரெலியா ஹோட்டல் ஒன்றில் சிறிது நேரம் தங்கியிருந்த அவர்கள் – கொழும்பு நோக்கிச் செல்லும் வழியில் வரக்காபொல ஹோட்டலில் தங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
10 ஆண்களும், 5 பெண்களும் கைது செய்யப்பட்ட போது, அவர்களுடன் 08 குழந்தைகளும் இருந்துள்ளனர்.
‘யுக்திய’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.