நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு

🕔 September 18, 2023

நுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் அநுராதபுர விமான நிலைய வீதியிலுள்ள வீட்டுக்கு அருகில் வைத்து நேற்றிரவு (17) அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது வேனில் வந்த சிலர் இரவு 10.45 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட உத்திக, தற்போது நாடாளுமன்றில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். 

இந்தநிலையில், சிசிரிவி காணொளிகள் ஊடாக, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்