கஹவத்தையில் 43 கோடி ரூபாய் விலைக்கு ஏலம்போன நீல மாணிக்கக்கல்

🕔 August 17, 2023

ஹவத்தை – கட்டங்கே பகுதியில் உள்ள சுரங்கத்தில் இருந்து கடந்த வாரம் எடுக்கப்பட்ட நீல மாணிக்கக்கல் (Blue Sapphire) ஒன்று, இதுவரை இல்லாத வகையில் 430 மில்லியன் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் பிரதிநிதிகள் இந்த இரத்தினக்கல்லை 99 காரட் நீல மாணிக்கக் கல் என சான்றளித்துள்ளனர்.

இரத்தினபுரியைச் சேர்ந்த பல இரத்தினக்கல் வர்த்தகர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் இந்த நீல மாணிக்கக்கல் கஹவத்த பிரதேசத்தில் ஏலம் விடப்பட்டது.

கஹவத்தையைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் முதலில் 470 மில்லியன் ரூபாவுக்கு குறித்த மாணிக்கக்கல்லை கேட்டிருந்த போதும், ஏலத்தின் போது 60 மில்லியன் ரூபா விலையை குறைத்தார்.

இதனால்,பெல்மடுல்லவைச் சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவருக்கு அந்தக் கல் விற்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்