இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம்

🕔 October 5, 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகனத்தின் மீது நேற்று (04) காலை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் வாயில் சாவடி கதவு விழுந்த சம்பவம் தொடர்பில், அதி பிரமுகர் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் கார் மீது வாயில் சாவடிக் கதவு விழுந்து விபத்துக்குள்ளானமைஇது இரண்டாவது சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முறையும் பணியில் இருந்தவர் ஒரே அதிகாரியா, அல்லது இவை தற்செயலான சம்பவங்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்