Back to homepage

திருகோணமலை

பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை

பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை 0

🕔2.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை நிலாவெளியில் பெண்ணொருவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரை, இருபத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. நிலாவெளி – ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த நபர் ஆனந்தபுரியைச் சேர்ந்த பக்கத்து வீட்டுப் பெண்ணொருவரை தொலைபேசி

மேலும்...
மூதூர் களப்பு பகுதியில், உரப்பையிலிடப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

மூதூர் களப்பு பகுதியில், உரப்பையிலிடப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு 0

🕔1.Jun 2016

– எப். முபாரக் – சிசுவின் சடலமொன்றை திருகோணமலை – மூதூர் பகுதியில் இன்று புதன்கிழமை மூதூர் பொலிஸார் மீட்டுள்ளனர். இலங்கைப் போக்குவரத்து சபையின் மூதூர் நிலையத்தின் முன்னாலுள்ள களப்பு பகுதியிலேயே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. உரப்பையில் இடப்பட்டு, சிசுவின் சடலம் வீசப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மூதூர் பொலிஸார் அதனை மீட்டனர். சடலம் தற்பொழுது

மேலும்...
மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு

மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு 0

🕔29.May 2016

– றிசாத் ஏ காதர் – ‘மின் பொறிக்குள் சம்பூர்’  எனும் தலைப்பிலான வீடியோ  இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு, திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருகோணமலை பசுமை அமைப்பு இந்த இறுவட்டினை வெளியிட்டுட்டது. திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை  உறுப்பினர்களான  ஆர்.எம். அன்வர், சட்டத்தரணி ஜே.எம். லாஹிர்  மற்றும் ஜே .

மேலும்...
சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்; மு.கா. தலைவர் தெரிவிப்பு

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்; மு.கா. தலைவர் தெரிவிப்பு 0

🕔29.May 2016

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மு.கா. தலைவர் இதைக் கூறினார்.

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர்

கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர் 0

🕔28.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கடற்படை அதிகாரிக்கு இடையிலான விவகாரத்தினை வைத்துக் கொண்டு, பேரினவாத சக்திகளும் – தேசதுரோக சக்திகளும் முஸ்லிம்களுக்கும் படையினருக்கும் இடையில் கசப்புணர்வுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்த எத்தணிகின்றனர் என்று கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாகீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; “அண்மையில் சம்பூரில்

மேலும்...
ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது 0

🕔28.May 2016

– எப்.முபாரக் – திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி  ஆற்று மணல் ஏற்றிச்சென்ற இருவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 30 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் சீனிபுரவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி கந்தளாய் பகுதிக்கு உழவு இயந்திரத்தில் மணலைக் கொண்டு சென்ற போதே பொலிஸ்

மேலும்...
சம்பூர்  அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம்

சம்பூர் அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம் 0

🕔27.May 2016

– றிசாத் ஏ காதர் – மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் இன்று வெள்ளிக் கிழமை பேரணியொன்று இடம்பெற்றது. நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக எரிவாய்வு மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு

மேலும்...
தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு 0

🕔25.May 2016

– றியாஸ் ஆதம் – தனியான கல்வி வலயங்களை உருவாக்கும் போது, அவை தொடர்பில் இனரீதியாகச் சிந்தித்து, யாரும் அச்சம் கொள்ளக் கூடாது என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார். மேலும், குச்சவெளி மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு தனியான கல்வி வயலங்களை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம், அப்பிரதேசங்களின் கல்வித் தேவைகளை

மேலும்...
கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம்

கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம் 0

🕔24.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரை நிகழ்வொன்றில் வைத்து அநாகரீகமாக திட்டிய சம்பவம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. திருகோணமலை சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, குறித்த கடற்படை அதிகாரியை – கிழக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களிலும்

மேலும்...
அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு

அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு 0

🕔22.May 2016

– எப். முபாரக் – அமுக்கக் குண்டொன்றினை திருகோணமலை – கிண்ணியா கடற்கரையோரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர். இந்தக் குண்டு கடலலையில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு முன்னால் கடலில் குளிக்கச்சென்ற இளைஞர்கள்,  பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இக்குண்டு மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸர் கூறினார். குறித்த குண்டை செயலிழக்க

மேலும்...
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த, அமைச்சரவை அங்கீகாரம்; சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த, அமைச்சரவை அங்கீகாரம்; சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔17.Feb 2016

– எம்.வை. அமீர் – அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சில வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். இதேவேளை, திருகோணமலை மாவட்டம் இறக்கக் கண்டியில் மத்திய மருந்தகம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண அமைச்சரவைக்

மேலும்...
பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப்

பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப் 0

🕔13.Feb 2016

அதிபர் நியமனங்களின் போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவானதொரு தீர்மானத்தைக் கடைப்பிடிக்காமல், பாகுபாட்டின் அடிப்படையில் செயற்படுவதை, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினர் கைவிட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் போது, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கடைப்பிடித்து வரும் பாகுபாடான நடவடிக்கையினைக் கண்டித்து, நாடாளுமன்ற

மேலும்...
முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு

முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு 0

🕔11.Feb 2016

– ஜெம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட, வருடாந்த இளைஞர் மாநாடு எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர் ஆளுநர் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக மாநாட்டின் ஏற்பாட்டு குழு பிரதம ஒழுங்கமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள்  தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார். மேற்படி மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நகர

மேலும்...
அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம் 0

🕔28.Jan 2016

– றியாஸ் ஆதம் – அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்தான் இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்றும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான் 0

🕔26.Jan 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திரகாந்தன், திருகோணமலை மாகாண சபை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி, மாகாண சபை அமர்வில் சந்திரகாந்தன் கலந்துகொண்டார். இந்த நிலையில், நாளைய தினம் வரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்