சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்; மு.கா. தலைவர் தெரிவிப்பு

🕔 May 29, 2016

Hakeem - 09ம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மு.கா. தலைவர் இதைக் கூறினார்.

“சம்பூர் விவகாரம் குறித்து அமைதியாக இருப்பதற்கே விரும்பினேன். ஆனாலும், இந்த இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அது குறித்துப் பேசியிருந்தார். அதனால், நானும் பேச வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று கூறிய ரஊப் ஹக்கீம்; “இந்த விவகாரத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்” என்று ரஊப் ஹக்கீம் இதன்போது வலியுறுத்தினார்.

அதேவேளை, குறித்த கடற்படை அதிகாரியை முதலமைச்சர் திட்டியமையினை அனுமதிக்க முடியாது என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்