மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திரகாந்தன், திருகோணமலை மாகாண சபை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி, மாகாண சபை அமர்வில் சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன், இன்று நடைபெறுகின்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ளலாம் என்று, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 13ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில், கடந்த வருடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.