கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம்

🕔 May 24, 2016

Hafees Naseer - CM - 01கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரை நிகழ்வொன்றில் வைத்து அநாகரீகமாக திட்டிய சம்பவம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

திருகோணமலை சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, குறித்த கடற்படை அதிகாரியை – கிழக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஷ்டின் பெணான்டோ, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷப் மற்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி உள்ளிட்ட பலர் – நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் இவ்வாறு நடந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் தனக்கு முன்னுரிமை வழங்கப்படாமை தொடர்பிலேயே, ஹாபீஸ் நஸீர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், ஒரு முலமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டமையை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும், இது அநாகரீகத்தின் உச்சம் என்றும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வீடியோ

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்