சம்பூர் அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம்

🕔 May 27, 2016

Protest - Sapur -09
– றிசாத் ஏ காதர் –

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை நகரில் இன்று வெள்ளிக் கிழமை பேரணியொன்று இடம்பெற்றது.

நிலக்கரி மூலம் செயற்படும் அனல்மின்சார நிலையத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக எரிவாய்வு மூலம் செயற்படும் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முனைப்புக் காட்டிவரும் இவ்வேளையில், இந்திய அரசாங்கத்தை இவ்விடயத்தில் அதிக கரிசனை காட்டுமாறு வலியுறுத்தியே இப்பேரணி இடம்பெற்றது.

இப்பேரணியை மூதூர் பசுமைக்குழு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இப்பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். லாஹீர்  உட்பட தோப்பூர் அல்லை நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அமைதியான முறையில் அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். Protest - Sapur - 10

Comments

புதிது பேஸ்புக் பக்கம்