முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு
– ஜெம்சாத் இக்பால் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட, வருடாந்த இளைஞர் மாநாடு எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர் ஆளுநர் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக மாநாட்டின் ஏற்பாட்டு குழு பிரதம ஒழுங்கமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
மேற்படி மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், கலந்துரையாடல்களும் இந்த மாாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இம் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.