பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை
– எப். முபாரக் –
திருகோணமலை நிலாவெளியில் பெண்ணொருவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரை, இருபத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நிலாவெளி – ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த நபர் ஆனந்தபுரியைச் சேர்ந்த பக்கத்து வீட்டுப் பெண்ணொருவரை தொலைபேசி மூலமும் ,நேரிலும் தவறான வார்த்தை பிரயோகங்கள் மூலமாக ஏசியதாக, குறித்த பெண் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, சந்தேக கைது செய்த பொலிஸார், இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.