Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்கள்"

ஆளுக்கு 40 கோடி ரூபா பெற்றுக் கொண்டு, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவவுள்ளனர்: சரத் வீரசேகர குற்றச்சாட்டு

ஆளுக்கு 40 கோடி ரூபா பெற்றுக் கொண்டு, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவவுள்ளனர்: சரத் வீரசேகர குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர், ஆளுக்கு தலா 40 கோடி ரூபாவை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். சமஷ்டி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கும் எண்ணத்துடனேயே, இவர்கள் இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன்

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், ஓய்வூதியம் இழந்த உறுப்பினர்களின் விபரம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், ஓய்வூதியம் இழந்த உறுப்பினர்களின் விபரம் 0

🕔10.Nov 2018

– அஹமட் ஐந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பாக 08ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால், ஏராளமான உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு 01 செப்டம்பர் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதற்கமைய, சுமார் 03 வருடங்களும் 02 மாதங்களுமே கலைக்கப்பட்ட நாடாமன்றத்தின் ஆயுட்காலம் அமைந்துள்ளது. எனவே, இம்முறை முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றவர்கள், எதிர்வரும் நாடாளுமன்றத்துக்கும் தெரிவு

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம்;  ஒரு வருடத்துக்கு இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம்; ஒரு வருடத்துக்கு இல்லை 0

🕔29.Sep 2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை, ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த முடிவை நிதியமைச்சு எடுத்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம், இந்த இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக, நிதி மற்றும் ஊடக அமைச்சு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம்: 215 சதவீதத்தால் அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம்: 215 சதவீதத்தால் அதிகரிப்பு 0

🕔2.Aug 2018

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் வகையில் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பானது 215 சதவீதமாக இருக்கும் என்றும், அண்மையில் நீதிபதிகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு இணையாக, மேற்படி சம்பள அதிகரிப்பு அமையும் எனவும் நாடாளுமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்...
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை 0

🕔10.Dec 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்று சபையில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட மடிக் கணிணிகளில் ( 20 வீதமாவை கூட உபயோகிக்கப்படவில்லை என்று, அமைச்சர் ஹரின் பெனாண்டோ நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். நிலையியல் கட்டளைகள் தொடர்பான பத்திரங்களும், நாடாளுமன்றம் தொடர்பான ஆவணங்களும் மேற்படி மடிக் கணிணிகளில் உள்ள  போதிலும், அவற்றினைப் பயன்படுத்தாமல் – மரபு ரீதியில் அச்செடுக்கப்பட்ட ஆவணங்களையே, அதிகமான

மேலும்...
ஆளுந்தரப்பிலிருந்து 14 பேர், எதிரணியிலிருந்து 07 பேர்; பரஸ்பரம்  தாவுவதற்கு தீர்மானம்

ஆளுந்தரப்பிலிருந்து 14 பேர், எதிரணியிலிருந்து 07 பேர்; பரஸ்பரம் தாவுவதற்கு தீர்மானம் 0

🕔20.Aug 2017

அரசாங்கத்திலுள்ள சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஒன்றிணைந்த எதிரணிப் பக்கமாகத் தாவுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று, ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர்; அரசாங்கத் தரப்புக்கு மாறவுள்ளனர். இதன்படி, அரசாங்கத் தரப்பிலுள்ள 11 முதல் 14 வரையிலான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணிக்குச் செல்லவுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, எதிரணியிலுள்ள சுதந்திரக்

மேலும்...
கெஹலிய மகன் திருமண நிகழ்வில், ரவிக்கு எதிரான கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிப்பு

கெஹலிய மகன் திருமண நிகழ்வில், ரவிக்கு எதிரான கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனுடைய திருமண நிகழ்வில் வைத்தே, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டன எனத் தெரிய வருகிறது. கெஹலியவின் மகன் ரமித் என்பவரின் திருமண நிகழ்வு, கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. நட்டாலி செனாலி குணவர்த்தன

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டோர் யார்; வெளியானது முழு விபரம்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டோர் யார்; வெளியானது முழு விபரம் 0

🕔4.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த பிரேரணையில் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களில் 29 பேர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை நாடாளுமன்ற செயலாளரிடம், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று வியாழக்கிழமை கையளித்திருந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற

மேலும்...
மஹிந்த அணிக்கு மாறும் தீர்மானத்தை, டிசம்பர் வரை நிறுத்தி வையுங்கள்: மைத்திரி கோரிக்கை

மஹிந்த அணிக்கு மாறும் தீர்மானத்தை, டிசம்பர் வரை நிறுத்தி வையுங்கள்: மைத்திரி கோரிக்கை 0

🕔14.Jul 2017

அரசாங்கத்தை விட்டு விலகும் தீர்மானத்தினை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஒன்றிணைந்த எதிரணியுடன் கைகோர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

மேலும்...
சோமாலிய தற்கொலைத் தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலி

சோமாலிய தற்கொலைத் தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலி 0

🕔2.Jun 2016

சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் நேற்று புதன்கிழமை நடந்த தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 1‌5 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிரமுகர்கள் தங்கும் ஹோட்லொன்றின் நுழைவாயில் கார்குண்டு மூலம் தாக்கப்பட்டதோடு,  தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ‌அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கடந்த பிப்ரவரியில் மொகாதிசுவி‌ல் அல்-ஷபாப் இய‌க்கத்தால்

மேலும்...
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு 0

🕔9.May 2016

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்கான நடவடிக்கைகளை சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அமைப்புக்களின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் வீரசூரிய தெரிவித்துள்ளார் கடந்த வியாழக்கிழமையன்று அரசாங்கத்தின் பிரேரணை ஒன்றின் வாக்கெடுப்பின்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களின் வரவின்மையால்

மேலும்...
அனோமா தலையணைச் சண்டை, மஸ்தான் ஓடினார்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதுவருட நிகழ்வு

அனோமா தலையணைச் சண்டை, மஸ்தான் ஓடினார்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதுவருட நிகழ்வு 0

🕔12.Apr 2016

– அஷ்ரப் ஏ சமத் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியா்களின் முன் கூட்டிய தமிழ் – சிங்கள புதுவருட நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன. ஓட்டப்போட்டி, தலையணைச் சண்டை, கயிறிழுத்தல், கிறிக்கட் போட்டி ஆகியவை

மேலும்...
சாராயக்கடை நடத்தும் MPகளின் விபரம்; நிதியமைச்சர் சமர்ப்பித்தார்

சாராயக்கடை நடத்தும் MPகளின் விபரம்; நிதியமைச்சர் சமர்ப்பித்தார் 0

🕔4.Apr 2016

– முஜீப் இப்றாகிம் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேருக்கு மதுபானசாலைகளை நடத்துவதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவைக்கு சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த விபரங்களை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் சமர்ப்பித்தார். தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபானசாலைகளை நடத்துவதற்கு இதுவரையில் 1168 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த

மேலும்...
மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔25.Mar 2016

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பேருக்கு, மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உள்ளன என்று வெளியான

மேலும்...
MP களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்; 02 கோடி ரூபாய் வரை விற்பனை

MP களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்; 02 கோடி ரூபாய் வரை விற்பனை 0

🕔15.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்படி அனுமதிப்பத்திரங்கள் வேறு நபர்களுக்கு 180 முதல் 200 மில்லியன் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்