ஆளுக்கு 40 கோடி ரூபா பெற்றுக் கொண்டு, 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவவுள்ளனர்: சரத் வீரசேகர குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர், ஆளுக்கு தலா 40 கோடி ரூபாவை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
சமஷ்டி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கும் எண்ணத்துடனேயே, இவர்கள் இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தமை, மேற்படி சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்.ரி.ரி.ஈ. டயஸ்போராகளிடமிருந்தே, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பணம் வழங்கப்படவுள்ளதாகவும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.