மஹிந்த அணிக்கு மாறும் தீர்மானத்தை, டிசம்பர் வரை நிறுத்தி வையுங்கள்: மைத்திரி கோரிக்கை

🕔 July 14, 2017

ரசாங்கத்தை விட்டு விலகும் தீர்மானத்தினை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஒன்றிணைந்த எதிரணியுடன் கைகோர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தற்போதைய நிலைவரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அரசாங்கத்தை விட்டும் விலகவுள்ளதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், அவர்களின் தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு ஐ.தே.கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது, விரைவில் முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் மைத்திரி அணியிலிருந்து மஹிந்த அணிக்கு மாறுவதற்கு சிலர் தயாராக உள்ளமை போன்று, மஹிந்த அணியிலிருந்து மைத்திரி அணிக்கு மாறுவதற்கும் சிலர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்பான செய்தி: மைத்திரி தரப்புக்கு பாரிய இடி; அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர், மஹிந்த பக்கம் தாவுகின்றனர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்