நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

🕔 May 9, 2016

Parliament - 0011நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

இதற்கான நடவடிக்கைகளை சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அமைப்புக்களின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் வீரசூரிய தெரிவித்துள்ளார்

கடந்த வியாழக்கிழமையன்று அரசாங்கத்தின் பிரேரணை ஒன்றின் வாக்கெடுப்பின்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களின் வரவின்மையால் குழப்பநிலை ஏற்பட்டது

இது மக்களின் ஆணையை மீறும் செயல் என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படுவதாக சரத் வீரசூரிய தெரிவித்துள்ளார்

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை வாக்கெடுப்பின்போது 225 உறுப்பினர்களில் 163 பேர் சமுகமளிக்கவில்லை என்பது அதிர்ச்சி தரும் தகவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்