கெஹலிய மகன் திருமண நிகழ்வில், ரவிக்கு எதிரான கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிப்பு

🕔 August 4, 2017

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனுடைய திருமண நிகழ்வில் வைத்தே, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டன எனத் தெரிய வருகிறது.

கெஹலியவின் மகன் ரமித் என்பவரின் திருமண நிகழ்வு, கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

நட்டாலி செனாலி குணவர்த்தன என்பவரை ரமித் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண நிகழ்வில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது.

மேற்படி திருமண நிகழ்வில் வைத்தே, அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.

குறித்த பிரேரணையில் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.

Comments